திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸ் சார்பில் 21% தள்ளுபடியுடன் புதிய மருந்தகம், இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸ் குழுமம் சார்பில் 21 சதவீத தள்ளுபடியுடன் புதிய மருந்தகம் திறப்பு விழா, இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரத்த தான முகாம் துவக்க என முப்பெரும் விழா நடைபெற்றது.
திருப்பூர் மாநகரில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சுப்ரீம் மொபைல்ஸ் குடும்பத்தின் சார்பில் 21 சதவீத தள்ளுபடியுடன் புதியதாக சுப்ரீம் பார்மா திறப்பு விழா, இலவச ஆம்புலன்ஸ் வசதி துவக்க விழா மற்றும் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள ஆர்வி ரோடு சுப்ரீம் மொபைல்ஸ் அருகில் நடைபெற்றது. சுப்ரீம் பார்மா மருந்தகத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ரேவதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி, டிஎம்எப் மருத்துவமனை இயக்குனர் எஸ்.தங்கவேல், எம்ஜிபி அன்னபூரணி அம்மாள், சுபரீம் மொபைல்ஸ் இயக்குனர் தீபா ராதாகிருஷ்ணன், முதலாவது மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.
முதல் விற்பனையை ஸ்ரீ குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எஸ்.செந்தில் குமரன் துவக்கி வைத்தார். அதனை கோவை லட்சுமி கேட்டரிங் சர்வீஸ் மாதம்பட்டி ஆர்.நாகராஜ் பெற்றுக்கொண்டார்.
இலவச மருத்துவ சோதனை அறைகளை தெற்கு தொகுதி எம்எல்ஏ கே.செல்வராஜ் திறந்து வைத்தார். மேயர் தினேஷ்குமார் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
சுப்ரீம் மொபைல்ஸ் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்.
சிறப்பு விருந்தினராக தெற்கு மாநகர திமுக பொறுப்பாளர் டிகேடி மு.நாகராசன், மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ், சி.கோவிந்தசாமி, டாக்டர்கள் கே.பாண்டியராஜன், எம்.பி.செந்தில்குமார், எஸ்.ஆனந்த், என்.சரவணகுமார், கே.பொம்முசாமி, ஜெ.ரவி, இ.வி.பிரபு சங்கர், தொழில் அதிபர்கள் எம்.ஜி.பி.எலக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.பாலன்,மிதுன் டெக்ஸ் மிதுன்ராம், டிகேடி கல்வி குழுமத்தின் தலைவர் காதர்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுப்ரீம் சேரிட்டபிள் டிரஸ்ட் அறங்காவலர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன், சுப்ரீம் செல்வராஜ், சுப்ரீம் பார்மா பாரதி செல்வராஜ், சர்வேஷ், ஆதித்யா, மேலாளர் தினேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சுப்ரீம் மருந்தகத்தில் செப்டம்பர் 1 முதல் அனைத்து வகை நோய்களுக்கும் டாக்டர்கள் இலவசமாக பரிசோதனை செய்கின்றனர்.