டாக்டர் முத்துசரவணகுமாருக்கு
சிறந்த மூட்டு சிகிச்சை நிபுணர் விருது
தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்!!
கோவை : அகில இந்திய அளவில் தலைசிறந்த மருத்துவ மனைகள் மற்றும் அவற்றின் சிகிச்சை தரம், நவீன வசதிகள் ஆகிய வற்றை கொண்டு ஆண்டு தோறும் தரவரிசை பட்டியல் வெளியி டுவார்கள். அதன்படி இந்த ஆண்டிற் கான தரவரிசை பட்டியலை டைம்ஸ் நிறுவனம் வெளியிட் டுள்ளது.
முத்தூஸ் மருத்து வமனை கோவையின் ஆர்த்தோ துறை எனப்படும் எலும்பு முறிவு மருத்துவத்தில் புகழ் பெற்று வருகிறது. இம்மருத்துவ மனையின் தலைமை மருத்துவராக இருப்பவர் முத்துசரவணக்குமார். இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் இவரின் மருத்துவ சேவைக்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் இவரை பாராட்டி பெருமை படுத்திய நிகழ்வுகளும் உண்டு. சமீபத்தில் கூட ஆப்டிமல் மீடியா சொலி யூசன் என்ற நிறுவனம் தென்னிந்திய அளவில் அவசர சிகிச்சை அளிப்பதில் கோவை டாக்டர் முத்தூஸ் மருத்து வமனை இரண்டாவது இடம் பெற்றுள்ளது. கோவை அளவில் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது.
மேலும் டாக்டர் முத்து சரவணகுமார் தமிழகத்தின் சிறந்த மூட்டு சிகிச்சை நிபுணராக தேர்வு பெ ற்றுள்ளார். கோவையில் கடந்த 12 ஆண்டுகளாக விபத்தில் சிக்கிய 800 க்கும் மேற்பட்டோர் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரால் காப்பாற்ற பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சென்னையில் தலைசிறந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சேவையில் சிறந்த பணி செய்தவர்களுக்கு டைம்ஸ் நிறுவனம் விருது வழங்கி கௌரவித்தது.
இந்தஆண்டிற்கான டைம்ஸ் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற 50 பே ருக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரிகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
கோவையில்சிறந்த மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விருதை டாக்டர் முத்தூஸ்மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.