புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு சான்றிதழ்
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பிற்கான சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவை புலியகுளத்திலுள்ள தலைமை அலுவலத்தில் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன்ராஜ் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வை குருத்துவ ஆயர் சுரேஷ் ஆபிரகாம் ஜெபித்து தொடங்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர்.சி.செளந்தரபாண்டியன் வரவேற்புரையும், நிறுவனத்தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன்ராஜ் சிறப்புரையும் வழங்கினர். அமைப்பின் மாநில பொதுச்செயலளாராக சி.செளந்தரபாண்டியன் , முதன்மை ஆலோசகர் பாஸ்டர் டாக்டர்.எம்.பீட்டர், மாநில ஒருங்கிணைப்பாளராக டாக்டர் ஜே. கார்பீல்ட் ஜேன்சன், மாநில மகளிரணித்தலைவியாக ஐ. கரோலின் விமலா ராணி, கோவை மாநகர் மாவட்ட போதகரணி தலைவராக குருத்துவ ஆயர்.பா.சுரேஷ் ஆபிரகாம், போதகரணி செயலளாராக பாஸ்டர் எம்.யேசுராஜன், கௌரவ ஆலோசகர்கள் எஸ்.கணேஷன், வி.கனகராஜ், எம்.ஞான ஆனந்த், தலைமை செய்தி தொடர்பாளராக சந்தோஷ்.ஜி, கௌரவ தலைவர் பி.எஸ்.ஸ்டீபன், செளரிபாளையம் கிளைத் தலைவராக எக்ஸ். பால்ராஜ் புலியகுளம் மகளிர் அணித்தலைவி.ஜி.ஜோஸ்பின் மெர்ஸி ஆகியோருக்கு நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் புதிய பொறுப்பிற்கான சான்றிதழ்களையும், உறுப்பினர் அடையாள அட்டையையும் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் அமைப்பின் தலைமை செய்தி தொடர்பாளர் சந்தோஷ்.ஜி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிற்கான ஏற்பாடுகளை ஏ.லியோ பெர்ணாண்டஸ் மற்றும் எஸ். கிறிஸ்டி மோனிஷா ஆகியோர் செய்திருந்தனர்.