ஈஷா யோகா மையத்தில் வாலிபர் தற்கொலை….?
கள்ளக்குறிச்சி பரபரப்பு தீனியை மென்று தின்று விழுங்குவதற்குள்..!
இதோ அடுத்த பரபரப்பு ரெடி…
கோவை வெள்ளிங்கிரி மலை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில்…
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சார்ந்த 32 வயதான கொள்ளு ரமணா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தான் பத்திரிக்கைகளுக்கு கிடைத்த ஆடி மாத அதிரடி ஜாக்பாட் பரபரப்பு தீனி…
செய்தி இதுதான்…!?!*
அதாவது யோகா மையத்தில் வாலிபர் தற்கொலை அதுவும் எனக்கு மன அழுத்தம். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுதான் செய்தி…
அதாவது…..கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் பற்றி கடந்த பல ஆண்டுகாலமாகவே புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. வெள்ளியங்கிரி பகுதியில் சாடிவயலுக்கும், தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில்தான் ஈஷா மையம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக பல்வேறு அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இப்படியாக பல குற்றச்சாட்டுகள் நிறைந்த இந்த யோக மையத்தில் இந்த தற்கொலை நடந்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது
இது தற்கொலையா…? கொலையா..? என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது