நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே உள்ள கிராமமான செட்டிமல்லன்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (32). லாரி ஓட்டுநர் இவரது மனைவி கற்பகவல்லி இந்த இவர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேல்முருகன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்
இந்நிலையில் இன்று காலை வேல்முருகன், மனைவியை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் மனைவியை வெட்டிக் கொன்ற வேல்முருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்