முத்தையாபுரம் வடக்கு தெருவில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வடக்கு தெருவில் வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து, காலி சிலிண்டர் வைத்து கரண்டியால் தட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தூத்துக்குடி புறநகர் செயலாளர் கண்ணகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பூமயில் மாவட்டக்குழு உறுப்பினர் பா.சரஸ்வதி, நிர்வாகி பார்வதி, ஞானமணி, பிரம்மசத்தி, ஜெயலெட்சுமி முருகம்மாள், வடிவு, பொன்னம்மாள், பூமணி, சந்தனலெட்சுமி, முத்துலெட்சுமி, அருளம்மாள், ஜான்ஸிராணி, சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.