சுற்றுச்சூழல் பாதுகாப்பு – தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறத்தின் மையக்கரு

 

– வினி மகாஜன்

குடிநீர் & துப்புரவுத் துறை,

ஜல்சக்தி அமைச்சகம்.

 

ஆண்டுதோறும் ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த பூமியை பாதுகாத்து, மீட்டெடுக்கவும், உலக அளவில் கொண்டாடவும், கூட்டுமுயற்சிகள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை வலியுறுத்துவதே இதன் நோக்கம். ‘இயற்கையுடன் நல்லிணக்கமான நீடித்து வாழ்வது‘ என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி, ‘ஒரே ஒரு பூமி‘ என்பதே இந்தாண்டு பிரச்சாரத்திற்கான முழக்கம் ஆகும்.

மத்திய அரசின் முன்னோடித் திட்டமான தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் (SBM-G), சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தான் அடிப்படையாகக் கொண்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே, கிராமப்புறங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டு வருவது, சுத்தம் மற்றும் துப்புரவு நிலையை எட்டியதற்கு சான்றாகும்.

நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 11கோடி கிராமப்புற வீடுகளில் வசிக்கும் 50கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு நவீன கழிவறை வசதி கிடைக்க, தூய்மை இந்தியா இயக்கம் -கிராமப்புறம் வகை செய்துள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக (ODF) அறிவிக்கப்பட்ட கிராமங்களில், ஆண்டுதோறும் ரூ.50,000 சேமிக்கப்படுவதுடன், 4.7மடங்கு செலவிலான பலன்கள் கிடைப்பதாக, 2018-ம் ஆண்டுக்கான யுனிசெப் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதே ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வறிக்கையில், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் காரணமாக, வயிற்றுப்போக்கால் ஏற்படக்கூடிய சுமார் 3 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், 2017-ம் ஆண்டிற்கான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (BMGF)-யின் ஆய்வறிக்கை, தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் ஊட்டச்சத்து மற்றும் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும், இந்த இயக்கம் பல குடும்பங்களின் மருத்துவச் செலவுக்கான பணத்தை மிச்சப்படுத்தியிருப்பதுடன், வீடுகளிலேயே நவீன கழிவறை கிடைத்திருப்பதன் மூலம், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக 96சதவீத பெண்கள் உணர்வதன் மூலம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் (யுனிசெப்2017) பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம்-2ன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் திட மற்றும் திரவக் கழிசவ மேலாண்மையில் கவனம் செலுத்தப்படுகிறது.

 

இந்தியாவில், விலங்கினக் கழிவுகள், நகர்ப்புற திடக் கழிவுகள், வேளாண் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், பயிர்க் கழிவுகள் மற்றும் சந்தைக் கழிவுகள் உட்பட ஏராளமான உயிரிக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம்-2ல் உரமாக்குதல் மற்றும் மாட்டுச்சானம் என்ற அடிப்படையில், உயிரிக் கழிவுகள் கையாளப்படுகின்றன. கோபர்தான் திட்டத்தின்கீழ், சாண எரிவாயு அமைப்புகளை ஏற்படுத்த, ஒரு மாவட்டத்திற்கு ரூ.50லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதுடன், இதுவரை 370 சமுதாய சாண எரிவாயு அமைப்புகள் நிறுவும் பணி முடிவடைந்துள்ளது. சாண எரிவாயு அமைப்புகள், தூய்மையான எரிசக்தி மற்றும் இயற்கை உரத்தை வழங்குவதுடன், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பல்வேறு பலன்களையும் அளிக்கின்றன.

சாண எரிவாயு அமைப்பில் பயன்படுத்தப்பட்ட கழிவுகளின் உரம், நச்சு இல்லாதவையாக இருப்பதால், ரசாயண உரங்களால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் குறைக்கும்.

பிளாஸ்டிக் கழிவூ மேலாண்மையின்கீழ், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம், கிராமப் பஞ்சாயத்துகளில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாள்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவற்றுக்கு தடையும் விதிக்க வேண்டும். அத்துடன், வீடுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைப் புறக்கணித்தல், குறைத்தல் மற்றும் மறு பயன்பாடு செய்வதுடன், மறு சுழற்சியும் செய்ய வேண்டும்.

கிராமப்புறங்களில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் சாக்கடைக் கழிவுநீரை, தனித்தனியாக பிரிப்பதுடன், தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்தல், மறு பயன்பாடு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்றவையும் ஊக்குவிக்கப்படுகிறது.

தூய்மை இந்தியா இயக்கத்தில் பணியாற்றும் மாநில அரசு, மத்திய அரசு அல்லது தனியார் துறை என அனைத்துத் தரப்பினரும், நாட்டிற்காக பங்களிப்பை வழங்கக்கூடிய பெரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *