மோடி அரசின் எட்டு ஆண்டுகள்: “வலுவான” மற்றும்“ திறன்மிக்க” இந்தியாவைக் கட்டமைக்கிறது
டாக்டர் பாரதி பிரவீன் பவார்
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர்
அன்னை இந்தியா மீண்டும் ஒருமுறை விழிப்படைந்து இருப்பதை எனது கண் முன்னால் நான் காண்கிறேன். எனது அன்னை இந்தியா உலக உருவாக வீற்றிருப்பாள். மனித குலத்தின் நல்வாழ்வை நோக்கி ஒவ்வொரு இந்தியரும் சேவை புரிவார்கள். இந்தியாவின் இந்த பாரம்பரியம் உலக நல்வாழ்வுக்கு பயனுடையதாக இருக்கும்” என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலாவதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையில் எடுத்துரைத்தார். எட்டு ஆண்டுகளுக்கு பின் முன்னெப்போதும் காணப்படாத உலகளாவிய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாடங்களை கற்பதற்கு உலகம் இந்தியாவை எதிர்நோக்குகிறது, பிரதமர் மோடி அவர்களின் திறன்மிக்க தலைமையின் வழிகாட்டுதலால் சுவாமி விவேகானந்தரின் இந்தியா பற்றிய தொலைநோக்கு பார்வை எதார்த்தமாகியுள்ளது. இந்தியாவின் ஆற்றலை நன்றாகவும், உண்மையாகவும் வெளிப்படுத்தும் தருணம் 2014 மே 26 அன்று தொடங்கியது அது குடிமக்களுக்கு அதிகாரமளித்தல், பதிலளிக்கும் பொறுப்புள்ள அரசு என்ற இரண்டு தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் சுகாதார முறை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கு அடித்தளமாக தேசிய சுகாதார இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. வலுவான, திறமையான, ஏற்கத்தக்க, சுகாதார நடைமுறையை மேம்படுத்தும் நோக்கமுடைய தேசிய சுகாதார இயக்கத்திற்கு மனித ஆற்றலை உருவாக்குவது முன்னுரிமை துறைகளில் ஒன்றாக உள்ளது. போதிய அளவு, திறன்மிக்க, வலுவான சுகாதார பணியாளர்களை உருவாக்க பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் நிதி சார்ந்த மற்றும் நிதிசாராத ஊக்குவிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளில் 209 மருத்துவக்கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையில் மட்டும் 54 சதவீத அதிகரித்துள்ளது. தனியார் துறையில் அதிகரிப்பு 37 சதவீதமாகும். இதைதவிர, 157 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 71 மருத்துவக்கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக இளநிலை மருத்துவம் படிப்போருக்கான இடங்கள் 75 சதவீதமும், முதுநிலை மருத்துவ படிப்போருக்கான இடங்கள் 93 சதவீதமும் அதிகரித்துள்ளன. மருத்துவக்கல்வியில் இந்த சீர்த்திருத்தம் இந்தியாவில் மருத்துவர் – நோயாளி விகிதத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, மருத்துவ கவனிப்பின் தரத்தையும் மேம்படுத்தியுள்ளது.
நோய் வருமுன் தடுப்பதற்கான நிலையை மேம்படுத்த ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்களில் அரசு கவனம் செலுத்துகிறது. 2022 க்குள் இத்தகையை மையங்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் என்ற இலக்கில் ஏற்கனவே 1,18,355 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
எதிர்காலத்தில் ஏதாவது பெருந்தொற்று ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கான முயற்சிகளை விரிவுப்படுத்த ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மகப்பேறு என்ற நிலையை அதிகரிப்பதற்கு ஏற்ப, 2013-14ல் 17,000 என்று இருந்த மகப்பேறு மையங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
செயலூக்கமுள்ள நமது உலகத்தலைவர் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள அரசின் சாதனைகளையும், வெற்றிகளையும் காண்கின்ற காலமாக கடந்த எட்டு ஆண்டுகள் இருந்துள்ளன. மருத்துவ சேவைகளில் அரசின் வசதிகள் விரிவாக்கப்பட்டதன் காரணமாக சுகாதார அடிப்படை கட்டமைப்பு வேகமாக முன்னேறி வருகிறது. ஆரோக்கியத்திற்காக சாமானிய மக்கள் செய்யும் செலவு வெகுவாக குறைந்து வருகிறது.