மோடி அரசின் 8 ஆண்டுகள்
பல பத்தாண்டுகள் பழமையான அரசு நிர்வாகத்தின் செயல்களை மாற்றுவது அதன் பணியானது
– ராஜீவ் சந்திரசேகர்
மின்னணு & தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு &
தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர்
8 ஆண்டுகளுக்கு முன், 2014-ல் நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்றபோது, 60 ஆண்டுகால பழமையான காங்கிரசின் வாரிசு அரசியல் முறையாலும், பலவகையான கூட்டணியாலும், ஊழல் நிர்வாகத்தாலும் நாடு அயர்ச்சியடைந்திருந்தது. பிரதமர், மாற்றத்திற்கு உறுதியளித்தார். நிர்வாகத்தில், புதிய திசைக்கு உறுதியளித்தார். கடந்த 8 ஆண்டுகளாக அவர், நிதானமாகவும், வலுவாகவும், புதிய இந்தியாவைக் கட்டமைப்பதை நோக்கி முன்னேறி வருவதை காண்கிறோம்.
2014-ஆம் ஆண்டுக்கு முன், இந்தியாவின் நிலை, பெரிய சந்தை வாய்ப்பைப் பற்றியதாக இருந்தது. நிர்வாகத்தின் செயலின்மை, ஊழல், உற்றார் உறவினருக்கு சலுகை, நிலையற்ற கொள்கை, சிவப்புநாடா முறை, தரகு முதலாளித்துவம், நிதிமுறைகேடு ஆகியவை, ஒப்புக்கொள்ளப்பட்டவையாக இருந்தன. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த, 1980-களில் இவையெல்லாம் சகஜமாக இருந்தன. அதுமட்டுமின்றி, தில்லியிலிருந்து அனுப்பப்பட்ட ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் மக்களுக்கு உண்மையில் கிடைத்தது 15 பைசா மட்டுமே என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இது போன்ற காரணங்களால் 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டு கால ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டுவர, ஏழ்மையான, ஒரு குடும்பத்திலிருந்து கடுமையான உழைப்பின் மூலமும். சேவையின் மூலமும், குஜாரத் முதலமைச்சராக இருந்த, நரேந்திர மோடியை இந்திய மக்கள் பலத்த ஆதரவுடன் பிரதமராக்க வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போதைய வலுவான இந்தியாவிற்கு, ஏராளமான சீர்திருத்தங்களையும், நிர்வாக முன்முயற்சிகளையும் வெற்றிகரமாக அவரது அரசு மேற்கொண்டது. மேலும், தொழில்நுட்பத்திற்கான அவரது வாக்குறுதி வெகுவிரைவிலேயே நிறைவேற்றப்பட்டது. இது அவரது தொலைநோக்குப் பார்வைக்கான அடையாளமாகும். இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்குமான வாய்ப்புகளை அதிகரிப்பதாகும். பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம், இதற்கு ஓர் உதாரணம்.
டிஜிட்டல் இந்தியா திட்டம், தெளிவான மூன்று நோக்கங்களுடன் தொடங்கப்பட்டது. முதலாவது குடிமக்களின் வாழ்க்கையில், நிர்வாகத்தில், ஜனநாயகத்தில், மாற்றம் கொண்டுவருவது மிகவும் முக்கியமானது. இரண்டாவது, டிஜிட்டல் பொருளாதாரத்தை, வேலைவாய்ப்பை, முதலீடுகளை விரிவுப்படுத்துவது, மூன்றாவது, எதிர்கால தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்பதைவிட, தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தில் தலைமைத்துவமாக உருவாக்குவது.
ஒவ்வொன்றிலும் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை இந்த மூன்று நோக்கங்களும் காட்டுவதாக டிஜிட்டல் இந்தியா செயல்பாடு குறித்த கணிப்பு அறிக்கை கூறுகிறது. உதாரணமாக தில்லியிலிருந்து விடுவிக்கப்படுகின்ற ஒவ்வொரு ரூபாயும், தாமதமோ, ஊழலோ இல்லாமல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக சேர்கிறது.
டிஜிட்டல் இந்தியா திட்டம் பெருந்தொற்றுக் காலத்தில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை இது உறுதி செய்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள், இணையதளம் வழியாக அதிவேகமாக சென்றடைந்தன.
இதற்கு புதிய இந்தியாவின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தி அயராது பாடுபடுகின்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி செலுத்த வேண்டும். புதிய இந்தியாவிற்கு வரவிருக்கும் பத்தாண்டு தொழில்நுட்பப் பத்தாண்டு என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பொருளாதார திறனையும், வாய்ப்பையும் மெய்ப்பிக்க அனைவரும் கூட்டான முயற்சியை அளிப்பது நமது கடமையாகும்.