கொள்கைகள் வாயிலாக இந்தியா, பெண்களுக்கு எவ்வாறு அதிகாரமளிக்கிறது
கட்டுரையாளர்: திருமதி ஸ்மிருதி இரானி
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத்துறை அமைச்சர்
அனைவரது நலன், அனைவரது மகிழ்ச்சி என்பதை மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தி இருப்பது தெளிவாக தெரியும். தற்போதைய அரசு அமைப்பு ரீதியாக பாலின சமத்துவ அடிப்படையிலான கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. குடும்ப அட்டை வழங்குவதற்கு பெண்களை குடும்ப தலைவராக ஆக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், சமையல் எரிவாயு இணைப்புக்கான பிரதமரின் உஜ்வாலா திட்டம் போன்றவையும் பெண் பயனாளிகளுக்கு பலன் அளிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் பெண்களின் பொருளாதார ஆதாரத்தை உறுதிப்படுத்தியிருப்பதோடு, சமூகத்தில் அவர்களது நிலையையும் உயர்த்தி இருக்கிறது.
பெண்களுக்கு பலன் அளிக்காத பல்வேறு சுகாதாரத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு, பிரதமரின் ஜன் ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மகளிர் சார்ந்த பல்வேறு உடல் நல குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளதால், அதிகளவிலான பெண்கள், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடிகிறது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை ஆட்சி நடத்தியவர்கள் செயல்படுத்திய திட்டங்களை விட, கடந்த பத்தாண்டுகளுக்குள்ளாக பெண்களின் நலன்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதை அனைவரும் கண்கூடாக காணலாம்.
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொலைநோக்கு பார்வையுடன் 1998-ம் ஆண்டு மேற்கொண்ட ஆறு மாநிலங்களில் மேற்கொண்ட TIME USE SURVEYS அரசின் கொள்கைகளை வகுப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஐ நா சபையின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை வகுப்பதிலும் இந்த கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஊட்டச்சத்து, மகப்பேறு, குடும்ப நல அறுவை சிகிச்சை, மற்றும் குழந்தை ஆரோக்கியம் போன்றவற்றை மதிப்பிட, தேசிய குடும்ப நல ஆய்வு ஒரு அளவு கோளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. தேசிய குற்றப்பதிவேடுகள் ஆவணப்பிரிவு வெளியிட்ட தகவல்களின் படி, அரசு விரைவான நடவடிக்கை மேற்கொண்டு பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
எனவே, தனி நபர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மதிப்பீட்டு ஆலோசனை அமைப்புகள் பல்வேறு மதிப்பீடுகளை மேற்கொண்டு மக்கள் நலன்களுக்கான கொள்கைகளை உருவாக்க உதவ வேண்டும்.
————-