புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா குடுமியான்மலை சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களான கடம்பராயன்பட்டி, பரம்பூர், பினங்குடி, வண்ணாரப்பட்டி விசலூர், குடுமியான்மலை, புல்வயல், சுந்தரப்பட்டி, வயலோகம் போன்ற 9 கிராமங்களில் இருந்து மொத்தம் 45 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்கும் வண்ணம் அவர்களுக்கு தற்பொழுது குடுமியான்மலை சரகத்தில் குடுமியான்மலை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் திருமண மஹாலில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இலுப்பூர் வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் குடுமியான்மலை, புல்வயல் மற்றும் புதூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இன்று காலை முதல் மாலை வரை சரக அளவிலான தன்னார்வலர் களுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.