தாய்மை என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதைக் கொண்டாடும் வகையில்,

சிம்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னை யோகா ஸ்டுடியோ ஆகியவை இணைந்து மகப்பேறு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கர்ப்ப யோகா ஆகியவற்றை நடத்தின. சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி, நடைபெற்ற கர்ப்ப யோகா நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்களுக்கான யோகா பற்றியும், பிரசவம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்தும் ரோகினி மனோகர் விளக்கி கூறினார். இது பிரசவ கல்வியாளர் ஷீத்தல் சத்யா முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆரோக்கிய நிகழ்ச்சியானது தாய் ஆகப்போகும் பெண்களுக்கு பலவிதமான பலன்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது. இதில் சான்றளிக்கப்பட்ட பயிற்றுனர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்க அவர்களுக்கு உதவினார்கள்.

 

 

 

மகப்பேறுக்கு முற்பட்ட யோகா என்பது கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பிரசவத்திற்கு தயார்படுத்தும் ஒரு புதிய உடற்பயிற்சி முறையாகும். அகன்ற கோணத்தில் அமர்ந்த முன்னோக்கி வளைதல் (உபவிஸ்த கோனாசனம்), முக்கோண நிலை (திரிகோனாசனம்), நின்று கொண்டு முன்புறமாக வளைதல் (உத்தனாசனம்) போன்ற பல யோகாசன பயிற்சிகள் இதில் கற்றுத் தரப்பட்டன. இதை பெண்கள் தங்கள் வீடுகளில் வசதியாக மிகவும் எளிமையாக செய்யலாம். மேலும் கூடுதலாக, சிம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மற்றும் நடத்தை மாற்றங்களைச் சமாளிப்பதற்கான கவனிப்பு முறைகள் மற்றும் உணவுப் பரிந்துரைகள் மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் குறித்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

 

 

 

இந்நிகழ்ச்சியில் பேசிய சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசுவாமி கூறுகையில், தாய்மையின் அழகு முதல் பெற்றோரின் மன அழுத்தம் வரை, தாயாக மாறுவதற்கான அனைத்து பெருமையான அம்சங்களையும் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தொற்று நோய் பரவும் இந்த சூழலில் இதுபோன்ற யோகா கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த ஒரு பலனைத் தரும். இந்த முயற்சியானது பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கர்ப்ப காலத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு, சவால்கள் மற்றும் ஆலோசனைகள் பற்றி அவர்களுக்குக் கற்பித்தல் வரை அனைத்துவிதமான அனுபவத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது. இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்த சென்னை யோகா ஸ்டுடியோ மற்றும் ஷீத்தல் சத்யா ஆகியோருக்கு இத்தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

 

இதேபோல், சிம்ஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிறுவனம் மற்றும் ஐவிஎப் இயக்குனரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் பி.எம். கோபிநாத் பேசுகையில், பிரசவம் என்று வரும்போது பெண்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையுடன் இருப்பார்கள். இந்நிலையில் ‘கர்ப்ப யோகா’ அவர்களின் கவலைகள் மற்றும் பயத்தை போக்கும் அதே நேரத்தில் அவர்கள் தங்களை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய புரிதலையும் அளிக்கிறது. முக்கிய தசை பகுதிகளை, குறிப்பாக இடுப்பு மற்றும் அடிவயிற்றின் மைய தசைகள் மற்றும் இடுப்பு பகுதியை வலுப்படுத்த இந்த பயற்சிகள் உதவும் என்று தெரிவித்தார்.

 

 

 

இது குறித்து குழந்தை பிறப்பு கல்வியாளர், குழந்தை மசாஜ் பயிற்றுனர் ஷீத்தல் சத்யா பேசுகையில், கர்ப்ப யோகா நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பல பெண்கள் தங்களுடைய மற்றும் தங்கள் குழந்தையின் நல்வாழ்வுக்காக இதில் பங்கேற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். மகப்பேறுக்கு முந்தைய நிலையில் பெண்கள் தங்களின் உடல்நலம் குறித்து அறிந்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்கவும், பாதுகாப்பான மகப்பேறுக்கு வித்திடும் அதே வேளையில் பிரசவம் மற்றும் பிரசவம் பற்றிய அறிவை அவர்கள் பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

 

 

 

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை யோகா ஸ்டூடியோ நிறுவனர் ரோகிணி மனோகர் கூறுகையில், இந்த சிறந்த முயற்சியில் சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மகப்பேறுக்கு முற்பட்ட யோகா என்பது உடற்தகுதிக்கான ஒரு விரிவான அணுகுமுறையாகும், இது பிரசவத்தின் போது நெகிழ்வுத்தன்மை, மனதை மையப்படுத்துதல் மற்றும் செறிவூட்டப்பட்ட சுவாசத்தை உள்ளடக்கியதாகும். மேலும் இது பல ஆராய்ச்சியாளர்களால் பாதுகாப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த யோகா அவர்களுக்கு சகிப்புத்தன்மை மற்றும் ஊக்கத்தையும் வழங்குவதோடு, அவர்கள் தாயாகிய மகிழ்ச்சியைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *