இந்தியாவின் ஐபிவி-6 வளர்ச்சியும் அதன் பலன்களும்
திரு. ஏ.கே.திவாரி உறுப்பினர் (தொழில்நுட்பம்), டிஜிட்டல் கம்யூனிகேஷன் கமிஷன் & திரு. சச்சின் ரத்தோர், ஏடிஜி (என்டி-I)
A. K. Tiwari, Member (Technology), Digital Communication Commission and Sh. Sachin Rathore, ADG (NT-I),
விரிவான உள்நாட்டு தொழில்நுட்ப சூழல் முறையை உருவாக்குவதில் முன்னேற்றம் அடைந்து வரும் இந்தியா, அபரிமிதமான டிஜிட்டல் கட்டமைப்புக்கான முக்கிய தூண்களுடன் டிஜிட்டல் வளர்ச்சிப் பாதையில் தடம் பதிப்பதுடன் குறைந்த செலவில் தரமான சேவை கிடைக்கச் செய்ய நோக்கிலும் பயணித்து வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக, எளிமைப்படுத்துதல் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், டிஜிட்டல் அணுகுமுறை போன்றவை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிப் பயணத்தில், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்வதில், இணையதளம் உலகெங்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அதிகாரம் அளிக்கப்பட்ட சமுதாயம் மற்றும் அறிவார்ந்த பொருளாதாரத்தை ஏற்படுத்துவதில், இணையதளம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளை நவீனமயமாக்கவும் மற்றும் இந்த நூதன வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாகவும் இது செயல்படுகிறது. இது மக்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரமளித்து, நாட்டில் உள்ள குடிமக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தியிருப்பதுடன், ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவது என்ற இந்தியாவின் தொலைநோக்கை எட்டவும் உதவிகரமாக உள்ளது.
வளரும் நாடுகளில் பிராட்பேண்ட் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் அதிகரிப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு குறைந்த செலவில், சம வாய்ப்புகளைக் கொண்ட, உள்ளடக்கிய பிராட்பேண்ட் இணைப்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 5ஜி, இயந்திரங்களுக்கு இடையிலான தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, க்ளவுட் கம்ப்யூட்டிங் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாடு பெருமளவில் அதிகரித்திருப்பதும், பிராட்பேண்ட் மற்றும் இணையதள சேவை பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு மேற்கொண்டு
வரும் டிஜிட்டல் முன்முயற்சிகளும், ஐபி எனப்படும் இணையதள நெறிமுறை முகவரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஐபிவி4 முகவரிகளைத் தாண்டி அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. தினந்தோறும் புதுப்புது பயன்பாடுகள் அறிமுகமாகிவரும் வேளையில் தொலைத் தொடர்பு கட்டமைப்பு வளர்ச்சி அதிகரிப்பதும் இயற்கையானதாக மாறியிருப்பதுடன் ஐபி முகவரிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இணையதள சேவைகள் தொடங்கப்பட்ட காலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஐபிவி 4, முகவரி தொகுப்பு முற்றிலும் நிரம்பிவிட்டதால் ஐபிவி6 பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய தொலைத்தொடர்பு துறை 2010 ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது. இது நாட்டில் ஐபிவி 6 சூழல் முறை வளர்ச்சிக்கு உதவியது. மத்திய – மாநில அரசுகள். பொதுத்துறை நிறுவனங்கள், பிற அரசு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சேவை வழங்குவோர். இணையதள சேவை வழங்குவோர், தளவாட உற்பத்தியாளர்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் / தரவு மைய சேவை வழங்குவோர், கல்வி நிறுவனங்கள் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் இது குறித்து விரிவான புரிதல் ஏற்படுத்தப்படுத்தப்பட்டதால், இவர்கள் அனைவரும் ஐபிவி6-க்கு ஆயத்தமாகி உள்ளனர். 90ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஐபிவி6 இணையதள பொறியியல் சிறப்பு நடவடிக்கைக் குழுவால் உருவாக்கப்பட்டது. இது ஐபிவி4-ல் பயன்படுத்தப்பட்ட 32 பிட்சுகளுக்கு பதிலாக 122 பிட்சுகள் வரை பயன்படுத்தும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டது. இது தவிர ஐபிவி6 உள்ளுறை பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
5ஜி தனித்த சேவையில் ஐபிவி6-ஐ கட்டாயமாக்குவது குறித்து 3ஜிபிபி அமைப்பு பரிசீலித்து வருகிறது. மத்திய அரசும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இந்தியாவில் உள்ள இணையதள சேவை வழங்குவோர் ஐபிவி6 சேவைகளை வழங்க ஆயத்தமாகி உள்ளனர். ஐபிவி6 நெறிமுறைகளுக்கு முழுமையாக மாற இதுவே சரியான தருணமாகும். மேலும், ஐபிவி 6-க்கு மாறுவது, புதிதாக உருவாகும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான பெரிய தொழில்நுட்ப புரட்சிக்கான தேவைகளை ஈடுகட்ட இந்தியாவை ஆயத்தமாக்கும்.