பள்ளி வளர்ச்சிக்கும் பள்ளி எதிர்கால நலனுக்கு ஆலோசனை 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட காட்சி
திண்டுக்கல் மாவட்டம்,பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமையாசிரியை கே.சி. அருள்ஜோதி அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனபாக்கியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக உதவித் தலைமையாசிரியர் அழகர்சாமி அனைவரையும் வரவேற்றார்.சுமார் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சிக்கும் பள்ளி எதிர்கால நலனுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக பழனி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. பெ.திருநாவுக்கரசு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.காலை மற்றும் மாலை வேளைகளில் பெற்றோர்கள் வண்டிகளை பள்ளி வளாகத்திற்கு வெளியே தள்ளி நிறுத்தி மாணவர்களை இறக்கி ஏற்றி விடும்படியும்கேட்டு கொள்ளப்பட்டது.
மாணவிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி செய்து கட்டிடங்கள் கட்டித் தரும்படிஅரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் உதவி தலைமை ஆசிரியர் நந்திவர்மன் நன்றி கூறினார்.