நகர்ப்புற சிறப்பம்சங்களைப் பாதுகாக்க இந்திய நகரங்களுக்கு சுழற்சிப் பொருளாதாரம் தேவைப்படுகிறது
ஷூபகட்டோ தாஸ்குப்தா
நேகா அகர்வால்
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் நகரங்கள் முன்னணி பாத்திரம் வகிக்கின்றன. தற்போதுள்ள நகர்ப் பகுதிகள் உலகளாவிய கரியமில வாயு வெளியேற்றத்தில் 75 சதவீதத்திற்கு பொறுப்பாக உள்ளன. ஆசியாவும், ஆப்பிரிக்காவும் நகரமயமாவதால் இந்தப் பங்களிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும். பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆதார வளங்களின் பற்றாக்குறையும் ஆதார வளங்களின் பயன்பாடு அதிகரிப்பால் ஏற்படும் வாழ்க்கை முறையும் நகர்ப் பகுதிகளின் நீடிப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகர்ப்புறங்களின் எண்ணிக்கை 2018 – 2050-க்கு இடையே இருமடங்காகும் என்பதால் தனது நகரங்களை அதிக வளங்கள் கொண்டதாகவும், குறைந்த மாசு உடையதாகவும் எவ்வாறு மாற்றுவது என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும். 2070-க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவது என்ற சிஓபி-26-ன் வாக்குறுதியை நிறைவேற்ற இந்தியா பாடுபடும் நிலையில், அடிப்படையான நகர்ப்புற மாற்றம் தேவைப்படுகிறது. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0 கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற இந்தியாவில் கழிவு நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு பெருமளவு முதலீடுகளை செய்ய வேண்டும். இது தீர்வுகளுக்கான தனித்துவ வாய்ப்பாக இருக்கும். சுழற்சிப் பொருளாதாரம் அதாவது ஆதார வளங்களை குறைப்பதிலிருந்து விலகுவது மற்றும் கழிவுகளை தடுப்பது மற்றும் மறுசுழற்சியை அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் முன்னேற்றம் காண முடியும்.
கழிவுகள் ஏற்படுவதையும், சுற்றுச்சூழல் மாசினையும், எரிசக்திப் பயன்பாட்டையும் குறைத்தல் மூலம், சுழற்சிப் பொருளாதாரக் கட்டமைப்பை உலகளவில் முன்கூட்டியே ஏற்றுக் கொண்ட பெர்லின், டொரொன்டோ, நியூயார்க் போன்ற நகரங்கள் அதன் பயனை அறுவடை செய்ய தொடங்கியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தியா தனது சொந்த உதாரணத்தைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்றாக உதய்ப்பூர் நகரம் உள்ளது. இங்குள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு இந்துஸ்தான் ஸிங்க் நிறுவனத்துடன் இணைந்து கழிவு நீர் சுழற்சி நிர்வாக முறையை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் இந்நகரத்திற்கு வெளியே உள்ள சுரங்கப் பணிகளுக்கு போதுமான அளவு தண்ணீரை இந்த நிறுவனம் பெறுகிறது.
நகர்ப்புற சுழற்சிப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக்க, விரும்பிய பயன்களை அடைவதற்குப் பரிசுகள் மற்றும் முறைப்படுத்தல்கள் மூலம் ஊக்குவிப்புகளை நகரங்கள் மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். இதில் பங்கேற்பவர்களை ஊக்குவிப்பதற்கான செயல்களை ஆய்வு செய்வதும் அவசியமாகும். நிதி ஒதுக்கீட்டுக்கு அப்பால் திட்டங்களின் சாத்தியம்
பற்றிய அளவீடு தேவைப்படுகிறது. இந்திய நகரங்கள் சமூக – பொருளாதார சூழல்களில் பெரும்பாலும் மாறுபட்டுள்ளன. எனவே இதில் உள்ள பிரச்சனைகளிலிருந்து படிப்பினையை எடுத்துக் கொள்வதுடன் கடந்த கால திட்டங்களை மதிப்பீடு செய்து உரிய நேரத்தில் நெகிழ்வுத்தன்மையோடு நீடித்த மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் நகர்ப்புற சிறப்பம்சங்களைக் கூட்டு முயற்சியில் பாதுகாக்க முடியும்.
(ஷுபகட்டோ தாஸ்குப்தா – முதுநிலை ஆய்வாளர் &
நேகா அகர்வால் – இந்திய கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தில் மூத்த இணை ஆய்வாளர். அனைத்துக் கருத்துக்களும் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள்)