மத்திய பட்ஜெட் 2022-23 எதனை ஆதரிப்பதாக இருக்கிறது?
வி ஆனந்த நாகேஸ்வரன் – மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்
மத்திய நிதியமைச்சரால் பிப்ரவரி 1 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் 2022-23-ன் முக்கிய அம்சங்களாக தொடர்ச்சி, சரிசெய்தல், சேகரிப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வழிவகுக்கும் அரசின் அதிகபட்ச செலவு ஆகியவை இருக்கின்றன.
கீழ்நிலையில் உள்ளவற்றை மேல்நிலைக்குக் கொண்டு வருதல் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நடைமுறையை இந்த பட்ஜெட் தொடர்கிறது. கடந்த இரண்டு பட்ஜெட்கள் போலவே, இந்த பட்ஜெட்டும் வெளிப்படைத்தன்மை தெளிவான கணக்குமுறை என்பதற்கான உயர்முன்னுரிமையைத் தொடர்கிறது.
உலகளாவிய பெருந்தொற்று இருந்த கடந்த இரண்டு ஆண்டுளில் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு அவசரகால கடன் திட்டங்கள் மூலமும், அவசரகால உணவுப்பொருள் உதவி (பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம்) ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கும் பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதித் திட்டத்திற்கும் ஒதுக்கீடுகள் அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமும் அரசு வாழ்வாதாரங்களை வழங்கியது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத அறக்கட்டளை மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த நிறுவனங்களுக்குக் கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பல முக்கியமான கட்டமைப்பு மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்பாக பெருந்தொற்று நெருக்கடியை அரசு பயன்படுத்தியுள்ளது. உதாராணமாக 14 துறைகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், நிச்சயமற்ற தன்மையில் இருந்த முன் தேதியிட்ட வரி விதிப்பு, தனியார்மயம், முகம் அறியாத மதிப்பீடு ஆகியவற்றுக்கு முடிவு கட்டுதல் ஆகியவை விளங்குகின்றன. கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருவாய்க்கான வரிக்குறைப்பு இல்லாமல் பழைய முறையிலேயே கணக்கு தாக்கல் செய்வது பற்றியும், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விரைவு சக்தி தகவல் பலகை, அரசு கொள்முதலில் சீர்திருத்தங்கள், தொழிற்சாலை சட்டங்களில் மாற்றங்கள், கணக்குகள் ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பு ஆகியவையும் தொடங்கப்பட்டிருப்பது இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களாகும்.
அரசின் மூலதனச் செலவு, திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டிற்கும் கூடுதலாக 36 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள், மூலதனத்தை அதிகரிக்க ரூ.1 லட்சம் கோடியை 50 ஆண்டுகளுக்கு
வட்டியில்லா கடனாக பெறுவது பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சம் கோடி கடனுக்கான வட்டி விகிதம், மத்திய அரசு பெறுகின்ற கடனுக்கான வட்டியை விட, அதிகமாக இருக்கும். மேலும் இந்தத் தொகையை வருவாய் செலவினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மாநிலங்களின் மூலதனச் செலவு, 2021 நவம்பர் வரை 67 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களை விட இது கூடுதலாகும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதலீடுகள் சமீப ஆண்டுகளில் கணிசமாக கடன்களாகவே இருந்தன. இதனால் அதன் வட்டிச்சுமை அதிகரித்தது. தற்போது அதற்கு ரூ.69,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு (சமபங்காக வழங்கப்பட்டுள்ளது) இந்த ஆணையத்தை வலுப்படுத்தி நிதி சார்ந்த விஷயத்தில் லாபகரமானதாக மாற்றும். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில், தொடர்ச்சியான முதலீடும் உறுதி செய்யப்படும்.
பெருந்தொற்று காரணமாக மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைப் போக்கும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூலதன முதலீடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பது தனியார் முதலீடுகளை ஈர்ப்பதையும் வெற்றிகரமாக்கும்.