உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஃபிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உலக புற்று நோய் தினம் – ‘சிகிச்சையின் இடைவெளியை நீக்குதல்’
– டாக்டர் மனோகர் அக்நானி, கூடுதல் செயலாளர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை.
உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஃபிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ‘சிகிச்சையின் இடைவெளியை நீக்குதல்’ (closing the care gap) என்பதே இந்த ஆண்டுக்கான மையக் கருத்தாகும். புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருபவர்களும் அவர்களை கவனிப்பவர்களும் படும் இன்னல்களை வார்த்தைகளால் கூற முடியாது. இதைவிட ஒவ்வொரு சிகிச்சைக்கும் இடையே இடைவெளி இருந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக தேசிய சுகாதாரக் கொள்கை – 2017, ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் உடல்நல மையங்கள் , பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்ற பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பொழுது நாட்டில் 89,000 சுகாதார மற்றும் உடல்நல மையங்கள் இயங்கி வருகின்றன. சுகாதாரம் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வாய், மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கின்றதா என ஆய்வு மேற்கொள்கின்றனர். புற்றுநோய், சர்க்கரை நோய், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கு மத்திய அரசின் தேசிய சுகாதரத் திட்டத்தின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு புற்றுநோயில் இருந்த தற்காத்து கொள்ளவும், தொற்றால் பரவாத நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார மையங்களில்
சி.டி.ஸ்கேன், மேமோகிராம் எனப்படும் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி மற்றும் ஹிஸ்டோபதாலஜி எனப்படும் திசுக்களின் நோய்களைக் கண்டறிதல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற சேவைகளை விரிவாக்கம் செய்ததன் மூலம் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடிகிறது.
இந்த நோய்க்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதைத் தவிர பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையினால் பல புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றன. மேலும் பல மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளாக இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக தரம் உயர்த்துப் பட்டும் வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக 22 எய்ம்ஸ்
மருத்துவமனைகள் மூன்றாம் கட்ட சிகிச்சைக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் கட்ட புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைப்பதற்கு, மத்திய அரசின் மூன்றாம் கட்ட புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
புற்றுநோயைக் கட்டுப்படுவதற்கு நமது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இந்த முயற்சிகளில் மேலும் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் எப்போதும் உண்டு, இதில் மக்களின் ஆதரவு மிக முக்கியமானதாகும். குறிப்பாக இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சீரான உணவு பழக்கம், யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற எளிதில் குணப்படுத்த முடியாத நோய்த் தாக்குதலுக்கு உட்படாமல் ஆரோக்கியமாக வாழலாம். மேலும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு தரமான மற்றும் உரிய நேரத்தில் உரிய பரிசோதனை, சிகிச்சைகளைத் தொடர்ந்து மேற்கொண்டால் அதிலிருந்து முழுமையாக குணமடையலாம்.