மாற்றத்தை ஏற்படுத்துமா மத்திய பட்ஜெட்…? மக்கள் எதிர்பார்ப்பு…?
தேசிய ஜனநாயக கூட்டணியின் பட்ஜெட் மந்திரம்: சீர்திருத்தம், மாற்றம், செயல்பாடு
தற்போதிலிருந்து அடுத்த சில வாரங்களில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10-வது மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்திவரும் நிலையில், வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்துக்கும் இடையேயான போராட்டத்தை கவனத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், நீடித்த வளர்ச்சி என்ற நோக்கத்தின் அடிப்படையில், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டங்கள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.
மத்திய பட்ஜெட் தொடர்பான முதல் சுற்று ஆலோசனையை முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டதிலிருந்து இது வெளிப்படுகிறது. குறிப்பாக, சர்வதேச முதலீட்டுச் சந்தையை வழிநடத்துபவர்கள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர், தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான புதிய சிந்தனைகளை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்மூலம், திட்டங்கள் தயாராக இருப்பது தெளிவாகிறது. உண்மையில், இதுதான் மோடினாமிக்சின் அடையாளம். சில நேரங்களில் எதிர்பாராத செயல்பாடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இன்னும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திட்டம் இல்லை என்று கூறிவிட முடியாது.
ஆளுமை, வளர்ச்சி என இரண்டிலும் புதிய கட்டிடத்தை ஏற்படுத்துவதற்கான செங்கல்களை தொடர்ந்து உருவாக்கும் வகையில், ஒவ்வொரு பட்ஜெட்டும் திகழ்கிறது என்பதை நிலைமையை உடனடியாக அறிந்துகொள்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கை வெளிப்படுத்தும். இதனுடன் சேர்த்து, சர்வதேச பொருளாதார பாதிப்புகள் அல்லது அண்மையில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளால் அடிக்கடி ஏற்பட்ட நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இருக்கும்.
உண்மையில், 2021-22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கடந்த 40 ஆண்டுகளாக நிதி விவகாரங்களில் செய்த தவறுகளை சரிசெய்ததுடன், வருவாய் செலவினத்துக்கு மாற்றாக, மூலதன
செலவினத்திலிருந்து செலவு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இறுதியாக பார்க்கும்போது, இந்த கட்டிடங்களுக்கான செங்கற்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ஒரே நோக்கமான நீடித்த வளர்ச்சி என்ற அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது தெளிவாகும்.