கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தற்பொழுது கொரனா அச்சம் காரணமாக கட்டுபாடு விதிகள் முறைப்படி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கோவை மலுமிச்சம்பட்டி எல் அண்டி பைபாஸ் அருகே ஜல்லிக்கட்டு நடத்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், ஜல்லிக்கட்டு பொறுப்பு க்குழு தலைவருமான மருதமலை சேனாதிபதி தலைமயில் நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மரு.பெருமாள்சாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.