போலி உரம் விற்பனை புகார் எதிரொலி
பழனி பகுதியில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் சோதனை நடத்தும்படி வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை அறிவுறுத்தினார். அதன்படி உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) உமா, பழனி உதவி இயக்குனர் மீனாகுமாரி, பழனி தாசில்தார் சசிகுமார் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழுவினர் பழனியில் உள்ள உரக்கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் தொப்பம்பட்டியில் உள்ள உரக்கடைகளிலும் சோதனை நடத்தினர். இதன்மூலம் மொத்தம் 25 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது