தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகள் திடீர் சாலை மறியல்
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் ஈடுபட்டனர் இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர்,நல்லூர்,மங்களுர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக மக்காச்சோளம்,பருத்தி,வரகு, மரவள்ளிகிழங்கு,மஞ்சள் சேனைக்கிழங்கு,வேர்கடலை,கரும்பு,நெல் போன்ற பயிர்கள் சேதம் அடைந்தது அதனை வேளாண்மை அதிகாரிகள் இது வரை வந்து பார்வையிட வரவில்லை என்றும் சேதம் அடைந்த பயிர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று காலை வேப்பூர் கூட்டு ரோட்டில் இருந்து ஊர்வலமாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்றனர் .
அப்போது தீடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி பேச்சு வார்த்தை நடத்தியதில் பேரில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது பிறகு வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாச்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இன்னும் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு நிர்வாண போராட்டம் நடத்த போவதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.