பழனி அருகே மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் அபாயம் அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலை…?
பழனி அருகே பாப்பம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குப்பம்பாளையத்தில் மேல்நிலை தொட்டி தொடர்ந்து சேதத்துடன் காணப்பட்டு வருகின்றன.
மேல்நிலை தொட்டியில் நீர் கசிவதால் கட்டிடங்கள் மிகவும் மோசமாக காணப்பட்டு வருகின்றது.
மேல்நிலை தொட்டி எப்பொழுது விழுமோ? என்ற உயிர் பயத்தில் அப்பகுதி பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் குப்பம் பாளையத்தில் உள்ள மேல்நிலை தொட்டியை ஆய்வு செய்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தொடர்ந்து சமீபத்தில் அ. பலையமுத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மேல்நிலை தொட்டி விழுந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் குப்பம்பாளையத்தில் இதே நிலைமை நீடிப்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.