பொதுக் கணக்குகளின் அலுவலகம் இன்று PFMS கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் (ROB) ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை நடத்தியது.

 

பொதுக் கணக்குகளின் அலுவலகத்தின் (CGA) கீழ் உள்ள அரசு நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ விழாவைக் கொண்டாடும் வகையில் பல மாநிலங்களில் PFMS பயிலரங்குகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (CGA) இன்று சென்னையில் PFMS பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது. கூடுதல் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் திருமதி டி.சி.ஏ.கல்யாணி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். விண்வெளித் துறை தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் (CCA), திருமதி. சங்கரி முரளி, இணை தலைமைக் கட்டுப்பாட்டாளர் திரு ஹரீஷ் ஸ்ரீவத்சவா, தமிழகஅரசின் நிதித்துறை சிறப்புச் செயலாளர் திருமதி. ரீட்டா தக்கர், நில நிர்வாக ஆணையர் திரு எஸ் நாகராஜன், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் திரு இம்ரான் சித்திக் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட, சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தால் நடத்தப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த புகைப்படக் கண்காட்சியை கூடுதல் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர்(Addl.CGA) திருமதி டி.சி.ஏ. கல்யாணி தொடங்கி வைத்தார்.

இந்த PFMS மேளாவின் ஒரு பகுதியாக, ஒற்றை நோடல் கணக்கு (SNA) மாதிரி மற்றும் வரவுகள், செலவு, அட்வான்ஸ், டிரான்ஸ்ஃபர் (REAT) தொகுதி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கும் அன்றைய தினம் நடத்தப்பட்டது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெச் டி எஃப் சி வங்கிகளின் பிரதிநிதிகளும், SNA மாதிரியில் தங்கள் மதிப்பு கூட்டல் குறித்த விளக்கங்களை வழங்கினர். பொதுச் செலவினங்களில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த பண மேலாண்மையை செயல்படுத்தும் நோக்கத்துடன் 1 ஜூலை 2021 முதல் SNA மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. SNA மாதிரியானது, இந்திய அரசின் திட்டங்களில் நிதி ஓட்டம் மற்றும் அவற்றின் பயன்பாடு கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்கிறது, இதன் மூலம் திட்டப்பணிகளில் செலவிடப்படாத நிலுவைகள் குறைக்கப்படுவதை உறுதி செய்கிறது.

இந்திய அரசின் கருவூலச் செயல்பாடுகளைக் கையாள்வதில் PFMS தளத்தின் வலுவான தன்மையை கூடுதல் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் (Addl.CGA) திருமதி டி.சி.ஏ.கல்யாணி எடுத்துரைத்தார். கருவூல ஒற்றை நோடல் கணக்கு (TSA) மற்றும் ஒற்றை நோடல் கணக்கு (SNA) ஆகியவற்றின் முன்முயற்சிகளுடன், நாட்டில் பண மேலாண்மைக்கான முக்கிய தகவல் தொழில்நுட்ப பயன்முறையாக PFMS இருக்கும் என்றும் அவர் கூறினார். விண்வெளித் துறை கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர்(CCA) திருமதி.சங்கரி முரளி, PFMS-DBT இன் சேவையை அரசாங்கத்தால் வழங்குவதிலும், முறைகேடுகளை களைவதிலும் உள்ள செயல்திறனை எடுத்துரைத்தார்.

தமிழக அரசின் நிதித் துறை சிறப்புச் செயலாளர் திருமதி. ரீட்டா ஹரிஷ் தக்கர் பேசுகையில், PFMSன் SNA தொகுதியில் சுமார் 91 திட்டங்களை தமிழக அரசு ஏற்றுள்ளது. PFMS போன்ற ஒரு விரிவான ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை தகவல் அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கணக்குகளின் இணை தலைமைக் கட்டுப்பாட்டாளர் (Joint CGA) திரு ஹரிஷ் ஸ்ரீவஸ்தவ், தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு, பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அனைத்து ஆதரவையும் உறுதி செய்தார்.

இந்த பட்டறை பல்வேறு பங்குதாரர்களுக்கு, அதாவது மத்திய அரசு, மாநில அரசு, வங்கிகள் மற்றும் அமலாக்க முகமைகளுக்கு PFMS பயன்பாடு குறித்த அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதோடு, மேலும் மேம்பாடுகளுக்கான யோசனைகளை முன்வைத்தது. PFMSன் விரிவாக்கம் மற்றும் கூடுதல் பங்குதாரர்களை கொண்ட வலையமைப்பின் அதிகரிப்புடன், PFMS மூலம் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இத்தகைய முயற்சிகள் நீண்ட தூரம் செல்லும்.

பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) என்பது இந்திய அரசின் ஒரு லட்சிய திட்டமாகும், இது நிதி அமைச்சகத்தின் பொது கணக்குகளின் கட்டுப்பாட்டாளரால் (CGA) செயல்படுத்தப்படுகிறது. கருவூலம் மற்றும் வங்கி இடைமுகம் மூலம் நிதிகளைக் கண்காணித்தல் மற்றும் செலவுகள் மற்றும் வரவுகளின் நிகழ்நேர அறிக்கையின் மூலம், நிதிகளை திறமையாக நிர்வகிப்பதற்கான தளத்தை PFMS வழங்குகிறது. செயல்படுத்தும் முகமைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதியின் பயன்பாட்டை கண்காணிக்க வரி அமைச்சகங்கள் / துறைகள் இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றன.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *