மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில்
ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பயனாளி ஒருவருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை தமிழக சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் ரகுபதி அவர்கள் வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா மாவட்ட வருவாய் அலுவலர் மா செல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு உலகநாதன் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்,
