கண்மாயில் மூலிகை விவசாயி பலி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பத்தரசங்கோட்டையை சேர்ந்தவர் கைலாசம் விவசாயி இவரது மகன் சத்திசோமையா இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள கம்மங்காடு கண்மாயில் குளிக்க சென்றுள்ளனர் சத்திசோமையா குளித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார் ஆனால் நீண்ட நேரமாகியும் கைலாசம் வீட்டுக்கு வரவில்லை சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் கிடைக்கவில்லை குளிக்கச் சென்ற அவர் காணவில்லை என்ற தகவல் அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கண்மாயில் இறங்கி தேடிப்பார்த்தும் கைலாசம் கிடைக்கவில்லை பின்னர் நேற்று காலையில் தேடுதல் பணி தொடர்ந்தது நேற்று காலை குளத்திற்குள் சேற்றில் சிக்கியிருந்தது தேடுதலின் போது தெரியவந்தது கண்மாயில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சடலமாக இருந்த கைலாசம் மீட்கப்பட்டு அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது