வெள்ளம் நிரம்பியதை பார்வையிட்ட அமைச்சர்
கோவையில் பெய்த தொடர் மழையால்,அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் வெள்ளம் நிரம்பியது.
இதனை கோவை மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணிகளை, தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பார்வையிட்டு,ஆய்வு செய்தார்.
உடன் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன்,கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜ்கோபால் சுங்காரா,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி. ஆர். ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி ஆகியோர் உடனிருந்தனர்.