சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
கோவையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வாலாங்குளம், உக்கடம் பெரிய குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், படகு இல்லம், மிதக்கும் பாலங்களை, மாண்புமிகு.தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் சந்தீப் நந்தூரி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.