ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆவணத்தான்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர்
ப. கலைச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மரமடக்கி சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர் தமயந்தி அவர்கள் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவம் அடைவதற்கான காரணங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கிக் கூறி பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் கூறுகையில் பெண்கள் துரித உணவு, உடற்பயிற்சி இல்லாமை, நெடுநேரம் செல்லிடப்பேசி மற்றும் டிவி பயன்படுத்துதல், போன்றவையே பெண் குழந்தைகள் தற்போதைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே பூப்படைந்து அதற்கான காரணங்களாக விளக்கினார். மேலும் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இதனை சரி செய்யலாம் என்றும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் கணித ஆசிரியை மேகலா அவர்கள் செய்திருந்தார்.