உலகளவில் பள்ளிகளுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்று வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சாதனை.

துபாயில் திங்கள்கிழமை அன்று நடந்த உலக சதுரங்க சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பெருவைச் சேர்ந்த சாகோ ஆலிவெரோஸை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து
உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் பெறுவதற்கு,
வேலம்மாளின்
சர்வதேச மாஸ்டர் பிரணவ் மற்றும்
மாஸ்டர் ரிந்தியா ஆகியோருடன்
கிராண்ட் மாஸ்டர்கள்
டி .குகேஷ்,
ஆர். பிரக்ஞானந்தா, லியோன் மென்டோன்கா ஆகியோர் கொண்ட குழு உதவியது.
நவம்பர் 25, 2021 முதல் தொடங்கிய ஓவர்-தி-போர்டு பிரிவுக்குத் தகுதி பெற்ற உலகெங்கிலும் உள்ள முதல் 12 அணிகளில் வேலம்மாள் குழுமமும் ஒன்றாக இருந்தது என்பது இதில் குறிப்பிடத்தக்கது ஆகும்.
சாதனை படைத்த சதுரங்க வித்தகர்களின் சிறப்பான சாதனைக்குப் பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. விவரங்களுக்கு, 8056063519 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *