உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி
தி.மு.க.இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு
ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகம் சார்பாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
பீளமேடு,ஃபன் மால் சாலையில் உள்ள, பி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி வைத்தார்.
உடன் கோவைமாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன் னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக்,
மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா ( எ) கிருஷ்ணன்,
கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி . ஆர். ராமச்சந்திரன்,
கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமல எஸ்.சேனாதிபதி,
தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன்,
கழக நிர்வாகிகள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள்,கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.