மக்கள் குறைதீர்ப்பு முகாம்
திருப்பூர்,
சாமளாபுரம் பேரூராட்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர் வினித், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
