திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு பெறும் நிகழ்ச்சி விஆர்வி மஹாலில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமன உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலை நகரம் மற்றும் சூலேஸ்வரன்பட்டி, சமத்தூர் பேரூராட்சிகளுக்கான விருப்பமனுவினை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், நகர செயலாளர் ஹக்கிம், மாவட்ட இணை செயலாளர்கள் பாண்டியன், நாகராஜ், உதயகுமார், முகுந்தன், ஒன்றிய செயலாளர்கள் இளஞ்செழியன், பிரனேஷ், வக்கீல் கண்ணன், செல்சேகர், மணிவண்ணன், ஆறுமுகம், விருகள்பட்டி பிரகாஷ், நகர மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, அன்வர்ராஜ், ராமனாதன், காளிதாஸ், பண்ணை கார்த்திகேயன், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.