பஞ்சு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர்.
கிரே காடாத்துணி நடைமுறையில் இருக்கும் 5% ஜி.எஸ்.டி வரியே தொடர வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய அரசை கண்டித்து பல்லடம் பகுதியில் விசைத்தறி சூல்ஜர் ஜவுளி சம்பந்தமாக ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது-.
இந்த போராட்டத்தின் நிகழ்வாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீர்மான கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது-. சிறப்பு அழைப்பாளராக தீரன் தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கார்த்திக், கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மற்றும் மாவட்ட தலைவர் ராமசாமி, தீரன் தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் மாவட்ட விவசாய அணி செயலாளர் தேவராஜ், ஒருங்கிணைந்த மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி சண்முகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், மாநகர மாவட்ட தீரன் இளைஞரணி செயலாளர் மாடி கோயில் செல்வகுமார், மேற்கு மண்டல செயலாளர் பொன்னுச்சாமி, நகர தலைவர் ஆறுக்குட்டி, ஒன்றிய செயலாளர்கள் பூபதி ,தங்கராஜ் ,செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் விசைத்தறியாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.