குழந்தையை மீட்டு கொடுக்க வேண்டும் நான்கு வயது குழந்தையுடன் பெண் கண்ணீர் மனு……

 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கொளத்தூர்
பஜனைகோவில் தெருவைச் சேர்ந்த பூங்காவனம் இவரது மகள் பிறந்தாவதி என்பவரை. அதே பகுதியை சேர்ந்த முருகேசன் செல்வி என்பவரது மகன் 37 வயது சிவலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். எனவே இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன மற்றும் இவர்களுக்கு 10 வயது மகன் சந்தோஷ். மற்றும் 4 வயது கவிஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளனர். எனவே சிவலிங்கம் என்பவர் கொத்தனார் கூலி வேலை செய்து வருகிறார் வேலை செய்யும் இடத்தில் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு உள்ளதால் இது தெரிந்துகொண்ட பிறந்தாவதி இதை பற்றி கணவனிடம் கேட்டதால்இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது இந்நிலையில் சிவலிங்கம் இடம் பேசாமல் வீட்டிலிருந்து இருக்கிறார். ஆனால் சிவலிங்கத்தின் பெற்றோர் பிருந்தாவதியை தரக்குறைவாக பேசி வெளியேற்றி இருக்கிறார் , இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது பிள்ளைகளை அழைத்து தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார், இந்நிலையில்
சிவலிங்கம் அவரது மகன் 10 வயது ஆன சந்தோஷ் என்பவரை அழைத்து சென்றிருக்கிறார் இதை தகவலறிந்து கேட்டதற்கு சரியான பதில் இல்லாததனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது 4 வயது குழந்தையை அழைத்துச் சென்றுமகனை மீட்டுத் தரக் கோரி கண்ணீர் மனு அளித்தார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *