பேராசிரியர் சுந்தரம் சாலமன் பாப்பையா
1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா சன் தொலைக்காட்சியில் ‘தினம் ஒரு திருக்குறள்‘ என்ற காலை நேர நிகழ்ச்சியின் மூலம் அன்போடு “திருக்குறள் தாத்தா” என்று அறியப்படுபவர். சாமானிய மக்களுக்கும் திருவள்ளுவரின் நீதி நெறிகளை எடுத்துரைக்கும் இந்த நிகழ்ச்சி 13 ஆண்டுகள் ஒளிபரப்பானது. தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்துவரும் ஒப்பற்ற கலை வடிவான பட்டிமன்ற நிகழ்வுகளில் 1961 முதல் ஈடுபட்டு வருபவர். சிறந்த பேச்சாளர், நெறியாளர், நடுவர் என தமிழ்நாடு முழுவதும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழ் மக்கள் வாழும் வெளிநாடுகளிலும், எட்டாயிரத்திற்கும் அதிகமான பட்டிமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். 1981ம் ஆண்டு மதுரையிலும், 2010ல் கோயம்புத்தூரிலும், 2019ல் அமெரிக்காவின் சிக்காகோவிலும் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றது சிறப்புக்குரியது. பிரபல தமிழ் அறிஞரான இவர் திருக்குறள், கம்பராமாயணம், பண்டைத் தமிழர் வீரம், நாகரீகம், மற்றும் வாழ்க்கை முறை பற்றிப் பேசும் புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் புலமை பெற்றவர். மதுரை கம்பன் கழகத்தின் நிறுவனர் தலைவரான பேராசிரியர் சாலமன் பாப்பையா இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக ராமாயணத்தின் நெறிமுறைகளை சாமானிய மனிதர்களுக்கு, குறிப்பாக அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குக் கொண்டுசெல்கிறார். மகாகவி பாரதியாரை உறுதியாகப் பின்பற்றும் இவர், ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பிறந்த நாளினை இலக்கியப் பெருவிழாவாகக் கொண்டாடுவதோடு பள்ளி, கல்லூரி மாணவர்களை கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகளில் பங்கேற்கச் செய்து ஊக்கப்படுத்துகிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிவருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி தி பாஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சாலமன் பாப்பையா தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்துவரும் ஒப்பற்ற கலை வடிவான பட்டிமன்ற நிகழ்வுகளில் 1961 முதல் ஈடுபட்டு வருபவர். எட்டாயிரத்திற்கும் அதிகமான பட்டிமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். மதுரை கம்பன் கழகத்தின் நிறுவனர் தலைவர்.
1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா சன் தொலைக்காட்சியில் ‘தினம் ஒரு திருக்குறள்‘ என்ற காலை நேர நிகழ்ச்சியின் மூலம் அன்போடு “திருக்குறள் தாத்தா” என்று அறியப்படுபவர்.
தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்துவரும் ஒப்பற்ற கலை வடிவான பட்டிமன்ற நிகழ்வுகளில் 1961 முதல் ஈடுபட்டு வருபவர்.
தமிழ்நாடு முழுவதும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தமிழ் மக்கள் வாழும் வெளிநாடுகளிலும், எட்டாயிரத்திற்கும் அதிகமான பட்டிமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
மதுரையிலும், கோயம்புத்தூரிலும், அமெரிக்காவின் சிக்காகோவிலும் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றது சிறப்புக்குரியது.
மதுரை கம்பன் கழகத்தின் நிறுவனர் தலைவரான இவர் கடந்த 15 ஆண்டுகளாக ராமாயணத்தின் நெறிமுறைகளை அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குக் கொண்டுசெல்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியவர்.