அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தமிழகமெங்கும் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அது போல் கோவையில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு உள்ளது.
இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெய்த மழையால்
சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் மழை நீரை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் கோவை மாவட்டத்தில் மழை நின்று இரண்டு நாளாகியும் சேறும், சகதியுமாக ஆங்காங்கே காட்சி அளிக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள், என பல நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.