புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அடைவு ஆய்வு தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு..
புதுக்கோட்டை,நவ.12: புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அடைவு ஆய்வு தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 203 பள்ளிகளில் 3,5,8,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவு ஆய்வு தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி புதுக்கோட்டையில் உள்ள அடப்பன்வயல் நகராட்சி தொடக்கப்பள்ளி,தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,எஸ்.எப்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அடைவு ஆய்வு தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் அலுவலர்கள்,வட்டாரக் கல்வி அலுவர்கள் ,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்,அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,7 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,105 ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 203 பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இத்தேர்விற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மவுண்ட்சீயோன் சிபிஎஸ்இ பள்ளிமுதல்வர் செயல்பட்டார்.
இத்தேர்விற்கு 203 சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பார்வையாளர்களாகவும் ,298 பி.எட் பயிற்சி மாணவர்கள் கள ஆய்வாளர்களாகவும் செயல்பட்டனர்.
இத்தேர்வை நாடுமுழுவதும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தியது குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர் சுகுமார்