முன்னாள் எம்.எல்.ஏ.நா.கார்த்திக்
வேண்டுகோள்
புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் குறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் நா.கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 01.11.2021 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது . இந்த வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும் , பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் , பெயர் நீக்கம் செய்திடவும் வருகின்ற 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் , வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.
இதில் 1.1.2022 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
மேற்கண்ட நாட்களில் நடைபெறும் இந்த முகாம்களில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் வட்டக் கழகப் பொறுப்பாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அந்தந்த வட்டங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக செயல் வீரர்கள் அனைவரும் தங்களது வட்டங்களில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு சென்று புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.