இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் மேற்கு ஒன்றியம் பருவாய் ஊராட்சியில் வாழும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மற்றும் இலவச சமையல் எரிவாயு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் வட்டாட்சியர் (தாசில்தார் ), மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ் , ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஆட்டோ குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாலகுமார், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் , மற்றும் திமுக கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.