கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ.நிதியுதவி
கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதி வார்டு எண் 74 (65) ல் காமராஜ் வீதியில் உள்ள செல்வராஜ் என்பவரது வீடு 2 நாட்களுக்கு முன் பெய்த மழையில் இடிந்து சேதமடைந்தது.
இதனை அறிந்த சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.கே.ஆர்.ஜெயராம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் தனது சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவியும் வழங்கினார்
அருகில் சாரமேடு பெருமாள், வார்டு செயலாளர்கள் ஆறுமுகம் செல்வராஜ், செந்தில், பேச்சிமுத்து, தங்கவேல், மகேந்திரன், வேலாயுதம், தீனா மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளனர்.