உயிர்பலி ஆவதற்குள் முள் வேலியை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
பேரிடர் காலங்களில் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வாயிலில் வைத்துள்ள முள்வேலி தடுப்பின் மீது விழுந்து பெரிதாக காயம் அடைவதற்கும் அதே சமயம் காவல்துறையினர் தடுமாறி அதே முள்வேலி தடுப்பில் விழுந்து காயம் அடைவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது எனவே அந்த தடுப்பில் இருந்து அந்த முள்வேலியை அகற்ற மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வயதான முதியவர்கள் பெண்மணிகள் இந்த முள்வேலி தடுப்பில் விழுந்தாள் உயிரிழப்பு ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது நாட்டின் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க இத்தகைய முள்வேலி தடுப்பை பயன்படுத்துவார்கள் சாமானிய மக்கள் வசிக்கும் காஞ்சிபுரத்தில் எதற்காக இந்த முள் வேலி தடுப்பு ??? உயர் அதிகாரிகள் இந்த தடுப்பில் இருக்க கூடிய முள் வேலியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை,
செய்தியாளர் ராஜ் கமல்