கேதார்நாத் புனிதப் பயணத்தின் முக்கியத்துவம்
பேரா.எஸ்.சி.பாக்ரி
முன்னாள் புலத்தலைவர்,
மேலாண்மைப் பள்ளி & முன்னாள் தலைவர், மலைப்பகுதி சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆய்வுப் படிப்பு மையம்
ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம், உத்தரகண்ட்
மந்தாகினி நதிக்கரையில் சோர்பாடி ஏரிக்குச் சற்றுக் கீழே 3583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் குறித்து ஸ்கந்த புராணத்தில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஒரு காலத்தில் மந்தாகினி பள்ளத்தாக்கில் மிகப் பெரும் பனிப்பாறை இருந்தது. அது உருகி கேதார்நாத், ராம்பரா, கௌரிகுண்ட், உகிமட், குப்தகாசி, சந்தரபூரி, தில்வாரா, ருத்ரபிரயாக் ஆகிய பல புனித தலங்கள் வழியாகப் பாய்ந்தோடி அலக்நந்தா நதியில் கலந்தது. சிவபெருமான் கைலாச மலையில் இருந்து நீங்கி கேதார்நாத்தில் இருப்பதற்கு முடிவெடுத்ததாக இந்து மத புராணங்கள் கூறுகின்றன. கேதார்நாத்தில் உள்ள கடவுளின் பெயர் சதாசிவம். அடைக்கலமாக காளை வடிவில் வந்த பாண்டவர் முன்பு சௌரியமாக இருப்பதற்கு முடியாமல் சிவபெருமான் நிலத்தில் புதைந்து உடலின் கீழ் பாகங்களை நிலத்துக்கு மேலே தோன்றச் செய்தார். கடவுளின் மீதி பாகங்கள் இமாயலத் தொடரின் நான்கு இடங்களில் வணங்கப்படுகின்றன. கைகள்- துங்க்நாத், முகம் – ருத்ரநாத், வயிறு – மத்மாஹேஷ்வர், முடி மற்றும் தலை – கல்பேஸ்வர். சிவனின் மேல்பாக உடல் நேபாளத்தில் முகர்பிந்த் என்ற இடத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இங்கு அவர் பசுபதிநாதராக வழிபடப்படுகிறார். குற்ற உணர்வு நீங்க பாண்டவர்கள் இந்த ஐந்து இடங்களிலும் கோவில்கள் கட்டினர். பாண்டவர்களோடு தொடர்புடைய பல புனிதத் தலங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. மகாபந்தா என்ற இடத்தில் உள்ள பைரவா மலைமுகட்டில் இருந்து பக்தர்கள் கீழே குதித்து சிவபெருமானுக்கு தங்கள் உயிரையே அர்ப்பணிப்பார்கள். இந்தப் பழக்கம் 19ஆம் நூற்றாண்டில் நிறுத்தப்பட்டது.
வியாசரின் ஆணைப்படி கார்வால் இமாலயப் பகுதியில் தங்கியிருந்த பாண்டவர்கள் மந்தாகினி நதியில் சிவனை வழிபட்டனர். இலக்கண அறிஞர் வரருச்சி இந்தப் பகுதிகளுக்கு வந்து சிவனை சாந்தப்படுத்தி தனது புகழ்பெற்ற பாணிணிய இலக்கணத்துக்கான விஷயங்களைப் பெற்றார். 8ஆம் நூற்றாண்டில் கேரளாவில் இருந்து ஆதிகுரு சங்கராச்சாரியார் கார்வால் பகுதிக்கு வந்துள்ளார். விஷ்ணுவின் அவதாரமான வாசுதேவர் வழிபாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். மிகப் பரிசுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிர்லிங்கமாக இந்துக்களால் கேதார்நாத் கருதப்படுகிறது. ஸ்ரீசங்கராச்சாரியார் கோவிலைப் புதுப்பித்து தெற்கில் இருந்து சைவர்களை பூசாரிகளாக நியமித்தார் என்று கூறப்படுகிறது. கோவில் கல்வெட்டுகளின்படி போஜ் திரிபுவன் என்ற அரசன் இந்தக் கோவிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. 76 அடி
உயரத்தில் உள்ள இந்தக் கோயில் சிற்பக் கலையில் சிறந்து விளங்குகிறது. கருவறையில் ஜோதிர்லிங்கம் உள்ளது. பூசாரிகளின் தலைமையிடமாக கேதார்நாத்தின் ராவல் உள்ளது. இங்கு வழிபடப்படும் சிவன் “மகாதேவர்” என அழைக்கப்படுகிறார். அழிக்கும் கடவுளான மகாதேவர் அதனுடனே ஆக்கலும் அழித்தலும் எனும் கோட்பாட்டை உற்பத்தியையும் தருகின்றார். “எதுவும் இழக்கப்படுவதில்லை“ என்ற விஞ்ஞான அடிப்படை இதில் தொனிக்கிறது. 2013ல் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் கேதார்நாத் பள்ளத்தாக்கு பாதிக்கப்பட்டு அதற்குப் பிறகு புதிய கேதார்புரி உருவாக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் புதிய பாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.