கோவையில் முதல் முறையாக
பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது..

#சந்திரன்ஸ் யுவா #அறக்கட்டளை மற்றும் கற்பகம் #பல்கலைக்கழகம் இணைந்து #பார்வையற்றவர்களுக்கான #கிரிக்கெட் #போட்டி நடத்தியது. இதில் பார்வையற்றோர், லேசான பார்க்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் ஓரளவுக்கு பார்வை உள்ளவர்கள் என மூன்று பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் மாநில அளவில் இருந்து 200 வீரர்களுடன் 12 அணிகள் பங்கேற்றன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதல் நாளில் 15 சுற்று நடைபெற்ற நிலையில்,இரண்டாவது நாளில் அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுகள்  நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு இந்திய துடுப்பாட்ட அணிக்காக விளையாட வாய்ப்பு அளிக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.பழனிசாமி தலைமை வகித்தார். எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலரும் நிருபருமான மணிமேகலை மோகன், ஹரிபவன் ஹோட்டல் நிர்வாக பங்குதாரர் பாலசந்தர் ராஜு, மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம் நிர்வாக இயக்குனர் நாராயணன் மணி உள்பட சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைப் பற்றி பேசிய சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் இணை நிறுவனரும் தலைவருமான சசிகலா, பார்வையற்றவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை உலகுக்குக் காண்பிப்பதே இதுபோன்ற போட்டியை நடத்துவதற்கு ஒரு யோசனை என்று பகிர்ந்து கொண்டார். சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சிவநேசன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை எளிதாக்குவதற்கும், அவர்களுக்கு மதிப்புமிக்க வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கு அறக்கட்டளை எப்போதும் முயற்சி செய்வதாக தெரிவித்தார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *