*முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் இருந்து பொது செயலாளர் காயல் அப்பாஸ் விலகல் !
முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் இருந்து பொது செயலாளர் காயல் அப்பாஸ் விலகியுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .
எனது தலைமையில் நடத்தி வந்த ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் என்கின்ற அமைப்பை முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் தலைமையில் கடந்த 08-11- 2021 அன்று முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் அமைப்புடன் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் இனைப்பு விழா நடைபெற்றது. இந்த இனைப்பு விழாவில் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தமிழ்நாடு மாநில பொது செயலாளராக என்னை அறிவித்துள்ளார்கள் .
முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் தலைமையின் கீழ் மாநில பொது செயலாளராக பொறுப்பேற்று மூன்று மாதம் காலமாக அமைப்பு சார்ந்த பணிகளையும் மக்கள் சேவைகளையும் மிக சிறப்பாக செய்து வந்ததனால் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் இன்று நான் பேசும் பொருளாக இருந்து வருகிறேன் என்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது .
அதே நேரத்தில் இஸ்லாமியர்களை பகைத்து கொண்டும், உறவினர்களை பகைத்து கொண்டும், நண்பர்களை பகைத்து கொண்டும் , உயிருக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் தொடர்ந்து பயணித்து வருவது என் மனதுக்கு சரியாக பட வில்லை .
முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் அமைப்பிலிருந்து உடனடியாக நீங்கள் விலக வேண்டும் என்று
எனது உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் காரணத்தினால் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் நான் வகித்து வந்த மாநில பொது செயலாளர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர்லிருந்தும் விலகி கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .