மக்கள் சபை நிகழ்ச்சி – கோவை 5வது வார்டு கவுண்டம்பாளையம்
கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. V செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 வது நாளாக “மக்கள் சபை” நிகழ்ச்சி மூலம் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகின்றார்.
அதன்படி, 3வது நாளான இன்று, கோவை மாநகராட்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, 5 வார்டு கல்பனா திருமண மண்டபத்தில் மகா சபை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், பேசிய அமைச்சர்;-
150 இடங்களில் மக்களில் சந்தித்து மாபெரும் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் சந்தித்து வருகின்றேன்.
கடந்த 30 ந்தேதி துவங்கப்பட்ட இந்த மகா சபை மூலம் பொதுமக்கள் 12,959 மனுக்கள் வழங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் தளபதி மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். முதியோர் உதவித்தொகை, மோசமான சாலை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் வரப்பெற்றுள்ளது.
சீரான குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், மோசமான சாலை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட மனுக்களும் வந்துள்ளது. அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்;- கோவையில் 2 நாட்களாக பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றதாகவும், இதுவரை சுமார் 12,000 அதிகமான மனுக்கள் வரப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இன்று 3 வது நாளாக பொதுமக்களை சந்தித்து வருகிறேன். கோவையில் மோசமான சாலைகளை புதுப்பிக்கப்படும், பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படும். குடிநீர் 2 நாட்களுக்கு ஒரு முறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தவர், தமிழக முதல்வர் தளபதிக்கு 234 தொகுதிகளுக்கும் பாரபாட்சம் இன்றி மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி வருகின்றார். கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த மகா சபை நிகழ்ச்சில், மாவட்ட ஆட்சியர் திரு.ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜகோபால் சிங்காரா, கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், பகுதி கழக பொறுப்பாளர் மதியழகன், 5வது வார்டு செயலாளர் குட்டி (எ) வேலுச்சாமி, திரு.ஜவகர், திரு.சரத், திரு.வசந்தகுமார் மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் திரு.மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: திரு.கோவை வசந்த்