கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் மேற்கு ஒன்றியம் சித்தம்பலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் எஸ.வினித் தலைமை வகித்தார். டாக்டர் பொன் பாரிவேந்தன் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை முன்னிலை வகித்தார் . திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் திரு செல்வராஜ் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி ரங்கராஜன் மாவட்ட இளைஞரணி பாலமுருகன் மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணியம் சிவகுமார் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் ,,மாவட்டபொறுப்புகுழு உறுப்பினர்கள் கீர்த்தி சுப்ரமணியம் ரத்தினசாமி பல்லடம் நகர முன்னாள் தலைவர் பி.ஏ சேகர் நகர முன்னாள் செயலாளர் விமல் பழனிச்சாமி , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்வரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பிசி கோபால், ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, கார்த்தி, மேனகா துரைசாமி, சிவா ,பிரகாஷ், துரைசாமி ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எஸ் எம் பழனிச்சாமி, மாவட்ட நெசவாளர் துணை அமைப்பாளர் சின்னச்சாமி ,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் குப்புசாமி ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஆட்டோ குமார் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் அமைப்பாளர் LPF பாலு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜேசிபி சேகர் ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தங்கராஜ் ,நவீன், சுரேஷ் ,கதிர்வேல், விஜய் பிரதாப் ,மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் பல்லடம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்டஊராட்சிமன்றத் தலைவர்கள் துணைத்தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர் வசந்தகுமார்