மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி
கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேட்டில் ஒரு வருடமாக வளர்த்து வந்த மா – மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் இயற்கை விவசாயி பூபதி. பாரம்பரிய வகை பயிரினங்களை வளர்ப்பதிலும், மா மரங்கள் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்ட விவசாயி பூபதி தற்போது அரிய மா மரங்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இரவோடு இரவாக அவரது தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒரு வருட மரங்களை வெட்டி சாய் துள்ளனர். வழக்கம்போல் அதிகாலை பார்வையிடச் சென்ற விவசாயி மரங்கள் வெட்டி கிடப்பதை கண்டு #அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி #காவல் #நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன் கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளார். பின்னர் விவசாயத்தை சீரழிக்கும் நோக்கில் செயல்பட்ட மர்ம நபர்களை பிடித்து தண்டனை வழங்கும்படி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த #கும்மிடிப்பூண்டி #போலீசார் முன்விரோதம் காரணமாக மரங்கள் வெட்டப்பட்டனவா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற #கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த #மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதி #விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
#திருவள்ளூர் மாவட்டம் #செய்தியாளர்
L.குமரன்