கோயம்பேடு பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட
2 இளஞ்சிறார்கள் பிடிபட்டனர். 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, அசூர், கிழக்குத் தெரு, எண்.272 என்ற முகவரியைச்சேர்ந்த முத்துசாமி, வ/40, த/பெ.தாண்டமுத்து என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். முத்துசாமி இன்று (22.10.2021) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் கோயம்பேடு, கீரை மார்கெட் அருகே சவாரிக்காக காத்திருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி ஆட்டோ ஓட்டுநர் முத்துசாமியிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து முத்துசாமி K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
K-10 கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 16 வயது மற்றும் 15 வயது 2 இளஞ்சிறார்களை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப்பின்னர் இளஞ்சிறார்கள் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.