ஆர்.கே நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 5 நபர்கள் கைது.
சென்னை, கொருக்குப்பேட்டை, JJ நகர் பகுதியில் வீரசக்கரபாண்டி, வ/32, த/பெ.குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று (21.10.2021) காலை சுமார் 06.00 மணியளவில் வீரசக்கரபாண்டி மற்றும் அவரது மாமனார் கொத்தாலிரமேஷ், வ/54 என்பவருடன் மேற்படி வீட்டின் அருகில் இருந்தபோது, கொத்தாலிரமேஷின் தம்பி ரவியின் மகன்களான தர்மா, சுந்தர் உட்பட 7 நபர்கள், மேற்படி வீரசக்கரபாண்டி மற்றும் கொத்தாலிரமேஷை முன்விரோதம் காரணமாக கத்தி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து வீரசக்கரபாண்டி, H-6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
H-6 ஆர்.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.நாகா (எ) நாகராஜ், வ/29, த/பெ.பிரபாகரன், JJ நகர் 4வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை என்பவரை நேற்று (21.10.2021) கைது செய்தனர். மேலும் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 2.தர்மா, வ/24, த/பெ.ரவி, JJ நகர், கொருக்குப்பேட்டை, சென்னை, 3.பிரவீன், வ/24, த/பெ.பீமன், JJ நகர் 4வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை, 4.பாபுலால், வ/34, த/பெ.முகமதுயூனுஸ், கண்ணப்பன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை, 5.சூர்யா, வ/23, த/பெ.ஆனந்தன், JJ நகர் 2வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை ஆகிய 4 நபர்களை இன்று (22.10.2021) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் புகார்தாரரின் மாமனார் கொத்தாலி ரமேஷின் தம்பி ரவியின் மகன்களான தர்மா மற்றும் சுந்தர் ஆகியோர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை கொத்தாலிரமேஷ் தட்டிக் கேட்டுள்ளார். இதன் முன்விரோதம் காரணமாக தர்மா மற்றும் சுந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொத்தாலி ரமேஷ் மற்றும் வீரசக்கரபாண்டியை கத்தி மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும் மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளிகளான சந்தோஷ் மற்றும் சுந்தர் ஆகியோரை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நாகா (எ) நாகராஜ் நேற்று (21.10.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 4 குற்றவாளிகளும் இன்று (22.10.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.