இறக்கை கட்டி பறக்கப்போகிறது பாதுகாப்பு தளவாட உற்பத்தி
7 புதிய நிறுவனங்கள் இன்று உதயம்
ராஜ்நாத் சிங்
“Deh Shiva var mohe ehe, Shubh karman te kabhun naan Darroon”.
எந்தவொரு முக்கிய சீர்திருத்தத்தையும் தொடங்குவதற்கும் மற்றும் முடிப்பதற்கும் அதிக தைரியம், உறுதி மற்றும் தீர்மானம் தேவைப்படுகிறது. ஏற்கனவே இருந்த நிலையை மாற்றுவதற்கும் மற்றும் இதர தரப்பினரின் போட்டியிடும் லட்சியங்களை சந்திப்பதற்கும், நல்ல சமநிலையான செயல்பாடு தேவை. ஆனால், நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் நமது அரசு, வலுவான முடிவுகளை எடுக்க ஒருபோதும் தயங்கியதில்லை மற்றும் நாட்டின் நீண்ட கால பயன்களை கருத்தில் கொண்டு பயனுள்ள சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.
பாதுகாப்பு துறையில் தற்சார்பு, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி கொள்கையின் அடித்தளமாக உள்ளது. தற்சார்பு இந்தியாவுக்கு நமது அரசு சமீபத்தில் விடுத்த அழைப்பு, இந்த இலக்கை அடைய மேலும் தூண்டுதலை அளித்துள்ளது. பாதுகாப்பு படைகளின் தேவைகளை நிறைவேற்றும் இந்திய பாதுகாப்பு தொழில்துறை, பல பொருட்களை தயாரிக்கும் துறையாகவும் மற்றும் சந்தையாகவும் உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சமீபத்தில் ஏற்பட்ட வெற்றியால், பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாகும் தனது ஆற்றலை இந்தியா உணர தொடங்கியுள்ளது. பாதுகாப்புத்துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை கொண்டு வர நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தனியார் மற்றும் பொதுத்துறைகளின் தீவிர பங்களிப்பு மூலமாக பாதுகாப்பு துறையில் தளவாட வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, ஏற்றுமதி உட்பட சர்வதேச சந்தையை அடையவுள்ளோம்.
ஏற்றுமதி, அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கான சாதகமான சூழலை உருவாக்கவும், உள்நாட்டு தயாரிப்புகளுக்கான தேவைக்கு ஊக்கம் அளிக்கவும், 2014ம் ஆண்டிலிருந்து, பாதுகாப்புத்துறையில் பல சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டுவந்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் துணை
அலுவலகமான ஆயுத தொழிற்சாலை வாரியத்தை (OFB), 100 சதவீதம் அரசுக்கு சொந்தமான, 7 புதிய பெருநிறுவனங்களாக மாற்றும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு, தன்னாட்சி செயல்பாடு, திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் மற்றும் புதிய வளர்ச்சி ஆற்றலை வெளிப்படுத்தும். இவற்றில் புதுமை கண்டுபிடிப்பு, மிகப் பெரிய ஒன்றாக விவாதிக்கப்படுகிறது.
ஆயுத தொழிற்சாலைகள், 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெருமையான வரலாற்றை கொண்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பில் அவற்றின் பங்களிப்பு அமோகம். அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்கள் நாட்டின் முக்கியமான சொத்து. ஆனாலும், கடந்த சில தசாப்தங்களாக, ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் தயாரிப்புகள் அதிக விலையுள்ளதாகவும், தரத்தில் சீரற்ற நிலையில் இருப்பதாகவும், விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதாகவும் பாதுகாப்பு படைகள் கவலை தெரிவித்தன.
ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் தற்போதைய முறையில் பல குறைபாடுகள் இருந்தன. அனைத்து தளவாடங்களையும், ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கும் மரபை, ஆயுத தொழிற்சாலை வாரியம் கொண்டிருந்தது. இது ஆயுத தொழிற்சாலை வாரியத்தை விநியோகத்தில் திறனற்றதாகவும், சந்தையில் போட்டியிடவும், புதிய வாய்ப்புகளை ஆராயவும் ஊக்கமற்றதாகவும் மாற்றியது. ஒரே அமைப்பில் கீழ் பல பொருட்களை தயாரிப்பதில் ஆயுத தொழிற்சாலை வாரியம் ஈடுபட்டுள்ளதால், அங்கு சிறப்பு நிபுணத்துவம் குறைவாக உள்ளது.
7 புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கான இந்த முடிவு, வணிக நிர்வாக மாதிரிகளின் பரிமாணமத்திற்கு ஏற்படி உள்ளது. இந்த புதிய அமைப்பு, இந்த நிறுவனங்களுக்கு போட்டிபோடும் ஊக்கத்தை அளிக்கும் மற்றும் உகந்த பயன்பாட்டின் மூலம் ஆயுத தொழிற்சாலைகளை ஆக்கப்பூர்வமாகவும், லாபகரமான சொத்தாகவும் மாற்றும்; பொருட்கள் தயாரிப்பில் அதிக நிபுணத்துவத்தை ஏற்படுத்தும்; தரத்தை மேம்படுத்துவதுடன் போட்டியை அதிகரிக்கும் மற்றும் செலவை குறைக்கும் மற்றும் புத்தாக்கம் மற்றும் வடிவமைப்பு சிந்தனையின் புதிய யுகத்துக்கு வழிவகுக்கும். இந்த முடிவுகளை அமல்படுத்தும்போது, தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகிறது என அரசு உறுதியளித்துள்ளது.
7 புதிய நிறுவனங்களும் இணைக்கப்பட்டு தங்கள் பணியை தொடங்கியுள்ளன. இந்திய வெடிமருந்து நிறுவனம்(MIL), பல வகை வெடிபொருட்களின் தயாரிப்பில் ஈடுபடும். இது வேகமாக வளர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்தியாவில் தயாரிப்பதாக மட்டும் அல்லாமல், உலகத்துக்காக தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் இருக்கும். கவச வாகனங்கள் நிறுவனம் (AVANI), பீரங்கி வண்டிகள், கண்ணிவெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனங்களை தயாரிக்கும். திறன்களை சிறப்பாக பயன்படுத்துதல் மூலம், இது உள்நாட்டு சந்தையில் தனது பங்கை அதிகரிக்கும் மற்றும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நவீன ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் (AWE India) நிறுவனம், துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடும். இது உள்நாட்டு தேவைகளை சந்திப்பதன் மூலம் பல வகை ஆயுதங்கள் தயாரிப்புகளில்
ஈடுபட்டு உள்நாட்டு சந்தையில் தனது பங்கை அதிகரிக்கும். இதர நான்கு நிறுவனங்களும் இதேபோல் செயல்படும்.
இந்த புதிய நிறுவனங்களுக்கு, போதுமான பணி இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் நிலுவையில் உள்ள ஆர்டர்கள் எல்லாம், ரூ.65,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்பில் நிகர்நிலை ஒப்பந்தங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், பலவகை தயாரிப்புகளில் ஈடுபடுவது மற்றும் ஏற்றுமதிகள் மூலம் புதிய நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் இறக்குமதியை தவிர்க்கக் கூடிய பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஒரு புதிய தொடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பு ஆயுத தொழிற்சாலைகள் பாதுகாப்பு படைகளின் தேவைகளை மட்டுமே தயாரித்து வந்தன. ஆனால் புதிய நிறுவனங்கள் அதை தாண்டி இந்தியாவில் வெளிநாடுகளிலும் புதிய வாய்ப்புகளை ஆராயும். மிகச் சிறந்த செயல்பாடு மற்றும் நிதி தன்னாட்சி ஆகியவை இந்த புதிய நிறுவனங்களை, புதிய வர்த்தக மாதிரிகள் மற்றும் புதிய கூட்டுறவுகளை ஏற்படுத்த அனுமதிக்கும்.
தற்சார்பு இந்தியா மற்றும் ஏற்றுமதிக்கான ராணுவ தளவாட தயாரிப்புகளின் திறன்களுக்கு உந்துதல் அளிப்பதில் நாங்கள் தற்போது கவனம் செலுத்துகிறோம். நாட்டில் வலுவான ராணுவ தளவாட தொழில் சூழலை ஊருவாக்க, இந்தி புதிய நிறுவனங்கள் தற்போதுள்ள பொதுத்துறை நிறுவனங்களுடனும், தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு திறன் மேம்பாட்டுக்கு சரியான நேரத்தில் திட்டமிடுவதன் மூலமும், இந்த ஆதாரங்களை உள்நாட்டு கொள்முதலுக்கு மாற்றுவதன் மூலமும், இறக்குதியை குறைக்க இது உதவும். இது வெற்றியடைந்தால், நமது பொருளாதாரம் முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
நம்முன் பல சவால்கள் உள்ளன. பழங்கால மரபுகளை மாற்றுவது சிரமம். இது மிகவும் சிக்கலான மாற்றத்தின் தொடக்கம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். பிரச்சினைகளை தீரக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனைத்து உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் அளிக்கும் மற்றும் இந்த புதிய நிறுவனங்களை சாத்தியமான வர்த்தக நிறுவனங்களாக மாற்றும். புதிய நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் ஆகியவை புதிய இயக்க கலாச்சாரத்துக்கான விதைகளை விதைப்பர் என நான் உறுதியாக நம்புகிறேன். அப்போதுதான், அவர்களின் தொழில் மாற்றமடைந்து புத்துயிர் பெறும்.